யாழ்.சங்கானையில் கோர விபத்தில் பலி

யாழ்.சங்கானையில் கோர விபத்தில்  பலி

யாழ். சங்கானையில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் தலை சிதறிப் பலியாகியுள்ளார்.

நேற்று மாலை 5.15 மணியளவில் சங்கானை 7ஆம் கட்டை வீதியில் உள்ள கூடத்து அம்மன் கோவிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் காரைநகரைச் சேர்ந்த தேவலிங்கம் வசிகரன் (வயது 28) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

குறித்த இளைஞன் தனது உறவினருடைய திருமணத்திற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் மானிப்பாய் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸார் விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.