யாழ். சரசாலை பகுதி வீதியி்ல் குடும்பப்பெண் மரணம்

யாழ். சரசாலை பகுதி வீதியி்ல் குடும்பப்பெண் மரணம்

சாவகச்சேரி - பருத்தித்துறை வீதி சரசாலை பகுதியில் மோட்டார்சைக்கிளில் பயணித்த குடும்பப்பெண் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

 
சம்பவம் தொடர்பில் மோட்டார்சைக்கிளை செலுத்திச் சென்றவரிடம் சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது குறித்த பெண் அணிந்திருந்த தலைக்கவசத்தின் கழுத்துப்பட்டியினை அணிய முற்பட்ட போது தவறி வீழ்ந்ததாக தெரிவித்தார்.
 
இந்த சம்பவத்தில் சாவகச்சேரி நுணாவில் பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி சாந்தினி (வயது 50) என்பவரே கவலைக்கிடமான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
குறித்த பெண்ணிற்கு - மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபருக்கும் இடையில் அண்மையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பிரச்சனைகள் இருந்ததால் சாவில் சந்தேகம் இருப்பதாக குறித்த பெண்ணின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மரண விசாரணை அறிக்கை கிடைக்காததால் பெண்ணின் சாவு விபத்தில் நிகழ்ந்ததா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.