யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்

யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில்   இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஜூனியன் பேக்கரி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளும், ஊனமுற்றவர் பயன்படுத்தும் துவிச்சக்கர வண்டியும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில், உசனைச் சேர்ந்த கந்தையா செல்வரத்தினம் (66), நுணாவில் மேற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த செல்லன் யோகராசா (70) ஆகிய இருவருமே படுகாயடைந்தவர்களாவர்.

காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக கிசிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.