யாழ்.சாவகச்சேரி நீதிமன்றத்தின் பின் பகுதியில் பரவலாக எரியும் தீ

யாழ்.சாவகச்சேரி நீதிமன்றத்தின் பின் பகுதியில் பரவலாக எரியும்  தீ

சாவகச்சேரி நீதிமன்றம் மற்றும் நகர வா்த்தக நிலையங்களுக்கு பின்பகுதியில் உள்ள  வெளிப் பிரதேசம் தீப் பற்றி எரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீயை அணைப்பதற்கு அப் பகுதிக்கு இராணுவத்தினா் சென்றுள்ளதாகவும் யாழ் மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவும் அ்ங்கு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இருந்தும் தீ அணைக்க முடியாதவாறு பெரும் சுவாலை விட்டு எரிந்து வருகின்றது. இத் தீயினால் சாவகச்சேரி நகரப்பகுதிக் கட்டடங்கள் மற்றும் நீதிமன்றக் கட்டடம் போன்றவற்றிக்கு பாரிய சேதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக அறிய முடிகின்றது.

அப் பகுதி தரிசு நிலங்களில் உள்ள புல்வெளிகளுக்கு விசமிகள் வைத்த தீயே இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.