யாழ்.சாவகச்சேரி மருத்துவமனையில் வாள் வெட்டு.ஒருவர் பலி 8 பேர் காயம்

யாழ்.சாவகச்சேரி மருத்துவமனையில் வாள் வெட்டு.ஒருவர் பலி 8 பேர் காயம்

யாழ்.சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் வெளிநோயார் பிரிவிற்குள் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எண்மர் படுகாயமடைந்துள்ளனர்.

அல்லாரைப்பகுதியில் இரண்டு குழுக்களுக்குள் இடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.

அதனையடுத்து குறித்த குழுவினர் மருத்துவமனைக்குள் வந்து மீண்டும் தகராற்றில் ஈடுபட்டனர். இதனையடுத்த மீண்டும் வாள் வெட்டு இடம்பெற்றது. இதில் 8பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் மேலதிக சிகிச்சைக்கான யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அதன்போது அல்லாரையை சேர்ந்த 25வயதுடைய அன்பழகன் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றமையால் வைத்தியசாலையினர் பீதியில் உறைந்துள்ளதுடன் வைத்தியசாலை சூழல் பதட்டநிலையிலும் உள்ளது. தற்போது பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.