யாழ்.சிறுப்பிட்டிப் பகுதியில் மின்சாரம் திருடிய பெண் உட்பட மூவா் கைது

யாழ்.சிறுப்பிட்டிப் பகுதியில் மின்சாரம் திருடிய பெண் உட்பட மூவா் கைது

சுன்னாகம் மின்சார சபையினரும் அச்சுவேலிப் பொலிசாரும் இணைந்து  கள்ளக்கரண்ட் எடுப்பவா்களுக்கு எதிராக சிறுப்பிட்டிப் பகுதியில் இரவிரவாக  நடாத்திய அதிரடி நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட மூவா் கைது செய்யப்பட்டனா்.

இவா்களில் பெண் தனது வீட்டு மின்மாணியில் கம்பியைச் செருகி கள்ளக்கரண்ட் எடுத்ததாகவும் மற்றைய இருவரும் வீதியால் சென்ற மின்சாரக்கம்பியில் கொழுக்கியைச் செருகி மின்சாரம் எடுத்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனா்.

இவா்கள் மூவரும் இன்று மல்லாகம் நீதிமன்றில் ஆயா்ப்படுத்தப்படவுள்ளனா்.