யாழ்.சிறுவர் இல்லத்திலிருந்த சிறுமியை காணவில்லை

யாழ்.சிறுவர் இல்லத்திலிருந்த சிறுமியை காணவில்லை

யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமியை காணவில்லையென இல்ல உத்தியோகத்தரால்,

 யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

நிஷாந்தன் திலக்கி (வயது 11) என்ற சிறுமியே இவ்வாறு காணாமற்போயுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (31) மதியம் மலசல கூடத்துக்குச் சென்ற சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினர்.