யாழ்.சுதுமலையில் ஒரே இரவில் நான்கு ஆலயங்களில் திருடர்கள் கைவரிசை

யாழ்.சுதுமலையில் ஒரே இரவில் நான்கு ஆலயங்களில் திருடர்கள் கைவரிசை

சுதுமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நான்கு ஆலயங்கள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருள்கள் சூறையாடப்பட்டிருப்பதாக மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் அதன் அண்மையாக அமைந்துள்ள சிவன், முருகன், வைரவர் ஆலயங்களிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயங்களின் கதவுகளை உடைத்தும், கூரையைப் பிரித்தும் திருடர்கள் உள்நுழைந்து அங்கிருந்த தங்கப் பொட்டுகள், கிரீடங்கள் என்பவற்றைச் திருடிச் சென்றுள்ளனர்.

தவிர முருகன் ஆலயத்தின் பொருள்களை சிவன்கோயிலில் கொண்டு சென்று போட்டதுடன், வைரவரின் ஐம்பொன் சூலத்தை அருகில் உள்ள காணி ஒன்றின் மரத்திலும் பதித்து அட்டகாசம் புரிந்து சென்றுள்ளனர். இந்த திருட்டுக் குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்