யாழ்.சுதுமலை பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டில் திருட்டு

யாழ்.சுதுமலை பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியரின் வீட்டில் திருட்டு

அதிகாலையில் வீட்டிலுள்ளவர்கள் வெளியே சென்றநேரத்தில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய திருடர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த திறப்பை எடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்று அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 15 பவுண் தங்க நகைகளையும் 15 ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.

இத்திருட்டுச் சம்பவம் சுதுமலை தெற்கில் வசிக்கும் ஓய்வுபெற்ற அதிபரின் வீட்டில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

 கொழும்பிலிருந்து வீட்டிற்கு வந்த மகனை மீண்டும் கொழும்பிற்கு அனுப்பு வதற்காக அதிகாலை 5 மணியளவில் வீட் டைப் பூட்டி திறப்பை வழமைபோல் வைக் கும் இடத்தில் மறைத்து வைத்துவிட்டு மக னுடன் தந்தை யாழ்ப்பாணம் சென்றுவிட் டார்.இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறியதை அவதானித்த திருடர்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மறைத்து வைக்கப்பட்டிருந்த திறப்பை எடுத்து கதவைத் திறந்து உள்ளே சென்று வீட்டில் அலுமாரிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 15 பவுண் தங்க நகைகளையும் 15 ஆயிரம் ரூபா பணத்தை யும் திருடிச் சென்றுள்ளார்கள்.மகனை பஸ்ஸில் ஏற்றிவிட்டு அரைமணி நேரத்திற்குள் வீட்டிற்குத் திரும்பி வந்த தந்தை சகல கதவுகளும் திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சிகுள்ளானதுடன் உள்ளே சென்று பார்த்தபோது பணமும் நகையும் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.இத்திருட்டுத் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது