யாழ்.சுன்னாகத்தில் இன்று வீதி போக்குவரத்து தொடர்பான செயலமர்வு

யாழ்.சுன்னாகத்தில் இன்று  வீதி போக்குவரத்து தொடர்பான செயலமர்வு

வீதி போக்குவரத்து தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு இன்று காலை 9.30 மணிக்கு சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் இடம்பெற்றது.

 
தற்போது யாழ். மாவட்டத்தில்  அதிகளவில் வீதி விபத்துக்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அதனை எவ்வாறு தவிர்த்தல் , வீதி போக்குவரத்து விதி முறைகள் தொடர்பாக மாணவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக இந்த செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
 
 
சுன்னாகம் றோட்டரக்கட் கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் இன்ரறக்ட் கழக அங்கத்தவர்கள், பாடசாலை ஆசிரியர்கள், சுன்னாகம்  போக்குவரத்து பொலிசார் உட்பட பலர் கலந்துகொண்டனர்