யாழ்.சுன்னாகத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை

  யாழ்.சுன்னாகத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை

யாழ்.சுன்னாகத்தில் பழைய பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பட்டப்பகலில் நடந்த கொள்ளையில் 8 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளும், பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சுன்னாகம் பழைய பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த வீடு ஒன்றில் நேற்றுப் பகல் வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே நுழைந்த திருடா்கள் அங்கிருந்த தாலிக்கொடி, காப்பு உள்ளிட்ட 20 பவுணுக்கும் மேலான நகைகளையும் 50 ஆயிரம் ரூபா பணத்தையும் களவாடிச் சென்றதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளரான ராசா சுந்தரராஜன் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடா்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.