யாழ்.சுன்னாகத்தில் மனைவியின் ஆடைகளுடன் வீட்டை எரித்த கணவன் கைது

யாழ்.சுன்னாகத்தில் மனைவியின் ஆடைகளுடன் வீட்டை எரித்த கணவன் கைது

மதுபோதையில் மனைவியின் ஆடைகளுடன் வீட்டை எரித்த நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று யாழ்.சுன்னாகம், பருத்திக்கலட்டிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 நபரொருவர் மதுபோதையில் தனது மனைவியுடன் சண்டைபிடித்துக் கொண்டு, மனைவியின் ஆடைகளை தீயிட்டுக் கொழுத்தியுள்ளார்.

இந்தத் தீ வீட்டின் கூரைச் சிலாகைகளில் பற்றிக் கொண்டதினால் வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து, அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டதைாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரின் மனைவி, கணவன் வீட்டினை எரித்துள்ளார் என மனைவி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.