யாழ்.சுன்னாகத்தில்16 வயது சிறுவனுக்கு 15 ஆயிரம் ரூபா அபராதம்

யாழ்.சுன்னாகத்தில்16 வயது     சிறுவனுக்கு   15 ஆயிரம் ரூபா அபராதம்

ஆவணங்கள் எதுவுமின்றி மோட்டார்ச் சைக்கிள் செலுத்திய 16 வயதுச் சிறுவன் யாழ்.சுன்னாகம் பொலிஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்டான்.

குறித்த சிறுவன் நேற்றுத் திங்கட்கிழமை (23.02.2015) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் சி.சதீஸ்தரன் 15 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

ஏழாலை பகுதியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் சாரதி அனுமதிப் பத்திரம், வரி அனுமதிப் பத்திரம், காப்புறுதி அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்கள் எதுவுமின்றி மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த போதே வசமாக மாட்டினார்.

அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற போதே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.