யாழ்.சுன்னாகம் சந்தையில் வாழைக்குலைகள் திருட்டு

யாழ்.சுன்னாகம் சந்தையில் வாழைக்குலைகள் திருட்டு

யாழ்.சுன்னாகம் வாழைக் குலைச் சந்தையில் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான வாழைக் குலைகள் திருடப்பட்டிருப்பதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையிலேயே இந்த வாழைக் குலைகள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தை வியாபாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

மேலும் புகையூட்டப்பட்டு வாழைக்குலகள் யாவும் பழுத்த நிலையில் இருந்த சுமார்45 இற்கும் மேற்பட்ட வாழைக்குலைகளே திருடப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேசமயம் சந்தையில் இரவு நேரத்தில் காவலுக்கு எவரும் இல்லை என்றும் நகரப்பகுதியில் காவல் செய்யும் காவலாளிகளும் இங்கு கடமையில் ஈடுபடுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடர்பில் சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.