யாழ் சென்று திரும்பிய 16 வயது மாணவனை காணவில்லை!

இயக்கச்சிப் பகுதியிலிருந்து அன்னாசிப்பழம் விற்க யாழ்ப்பாணம் சென்ற 16 வயது மாணவனை மூன்று தினங்களாகக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அண்ணனுடன் அன்னாசிப்பழம் விற்பதற்கு யாழ்ப்பாணம் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டுவிட்டு மறுநாள் பாடசாலைக்கு செல்வதற்காக வீடு திரும்பிய மாணவனே காணாமல் போயுள்ளார் என்று கூறப்படுகின்றது.

இயக்கச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த சந்திரமோகன் உதயகுமார் (வயது 16 ) என்னும் தரம் 11இல் படிக்கும் மாணவனே காணாமல் போயுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது