யாழ். திருநெல்வேலிச் சந்தையில் அமோக விற்பனையில் வெங்காயப் பூ

யாழ். திருநெல்வேலிச் சந்தையில் அமோக விற்பனையில்  வெங்காயப் பூ

யாழ்.குடாநாட்டின் பிரதான சந்தைகளில் ஒன்றாகக் காணப்படும் திருநெல்வேலிச் சந்தையில் வெங்காயப் பூவின் விற்பனை தற்போது அமோகமாக இடம்பெற்று வருகிறது.

யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரும்போக வெங்காயச் செய்கையிலிருந்து அதிக வெங்காயப் பூவின் விளைச்சல் பெறப்படுகிறது. இதனால் சந்தையில் வெங்காயப் பூவின் வரத்தும் அதிகமாகவுள்ளது.

இந்த நிலையில் ஒரு கிலோ வெங்காயப் பூவின் விலை 100 முதல் 160 ரூபா வரை பல்வேறு விலைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வெங்காயப் பூவைக் கொள்வனவு செய்வதில் நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டுவதையும் காணக் கூடியதாகவுள்ளது.