யாழ் திருநெல்வேலியில் ஆணின் உடலம் மீட்பு!கொடிகாமத்தில் யுவதி மாயம்

யாழ் திருநெல்வேலியில் ஆணின் உடலம் மீட்பு!கொடிகாமத்தில் யுவதி மாயம்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி, பனிக்கர் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலமொன்று, இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

27 வயதுடய சிவபாலசுந்தரம் தவராசா என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட நிலையிலேயே இவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் இவரது சடலம், யாழ். போதனா வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் .
இவரது கொலை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் 19 வயது யுவதி காணாமல்போயுள்ளார்

யாழ்.கொடிகாமத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியைக் காணவில்லையனெ அவரின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கொடிகாமம் மந்துவில் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த புஸ்பராசா றெசிக்கா என்ற யுவதியே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.

தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற குறித்த யுவதி,  இதுவரை வீடு திரும்பவில்லையென தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்