யாழ். திருநெல்வேலி இளைஞன் கடல் அலையில் சிக்கி மரணம்

யாழ்.திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞன் நேற்று முந்தினம் பிற்பகல் 2 மணியளவில் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

திருநெல்வேலி, கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாதகலில் உள்ள உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்து கொண்டுவிட்டு, சம்பில்துறை கடலில் குளிக்கச் சென்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது இரு இளைஞர்கள் கடலலையில் சிக்குண்டனர். அதில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். மற்றையவர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். விஜயகுமார் லக்ஸன் (வயது 17) என்ற இளைஞனே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

 இவரது சடலம் சங்கானை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கடற்படையினரால் காப்பாற்றப்பட்டவரான கொக்குவிலைச் சேர்ந்த கேதீஸ்வரன் நிரோஜன் (வயது 17) என்ற இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் - See more