யாழில் குளிக்கச்சென்ற இளைஞனைக் காணவில்லை

யாழ்ப்பாணம் திருவடி நிலைப்பகுதியில் கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று கூறப்படுகின்றது.

நேற்று வியாழக்கிழமை மாலை திருவடிநிலை பகுதியில் கடலுக்கு குளிக்கச் சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் நீந்திக் கரையை அடைந்துள்ளார். எனினும் மற்றையவர் கரை திரும்பவில்லை.

 இதனையடுத்து அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மற்றும் உறவினர்கள் மாலை முதல் நள்ளிரவு வரை தேடுதல் நடாத்தி வருகின்றனர் எனவும் எனினும் இளைஞன் மீட்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது