யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற பட்டம் ஏற்றும் விழா

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற பட்டம் ஏற்றும் விழா

யாழில் மக்களின் 'பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா  இன்று  யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


இந்த பட்டங்களில் வெகும் விமர்சையாக கட்டப்பட்டதும் பறக்கவிடப்பட்டதுமான பட்டங்களுக்கான விருதுகளில் முதல் இடத்தை டிராகன் பட்டமும்,இரண்டாம் இடத்தை கடல் கன்னி உருவ பட்டமும்,தக்கவைத்து கொண்டது.

மேலும் இதில் உள்ளுர் மற்றும் வெளியூர் பட்டம் செய்யும் கலையில் புகழ்பெற்ற நிபுணர்களால் உருவாக்கப்பட்ட 100 வர்ணப்பட்டங்கள் ஒரே நேரத்தில் பறக்கவிடப்பட்டதுடன் இதில் காலை மாலை என இரு அமர்வுகளாகவும் நடத்தப்பட்டது.


இதில் காலை அமர்வாக பட்;டம் கட்டுவது தொடர்பான பயிற்சி பட்டறையை தென் இலங்கை கலைஞர்கள் வழங்கயிருந்தனர். மாலை அமர்வாக வர்ணப்பட்டங்கள் ஏற்றும் விழாவும் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்விற்கு  வடமாகாண ஆளுநர் , வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,  மற்றும் ஆளுநரின் செயலாளர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.