யாழ்.தெல்லிப்பழையி்ல் நடைபெறும் புற்றுநோய் விழிப்புணர்வுக் கண்காட்சி

யாழ்.தெல்லிப்பழையி்ல் நடைபெறும் புற்றுநோய் விழிப்புணர்வுக் கண்காட்சி

யாழ். தெல்லிப்பழை சுகாதார பணிமனையால்  புற்றுநோயிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வுக் கண்காட்சி ஒன்று இடம்பெற்றது.

 
இன்று மாலை 4மணியளவில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்தக் கண்காட்சியானது திருவிழா முடிவடையும் வரை தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்தனர்.
 
மேலும் வரையறுக்கப்பட்ட தெல்லிப்பழை கூட்டுறவு சங்க வளாகத்தில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவு தாய்மார் கழக இணையத்தால் முன்னெடுக்கப்பட்ட இரசாயன,மருந்து,உர பாவனையற்ற மரக்கறி விற்பனை அங்காடியும் இந்த துர்க்கை அம்மன் கோயில் திருவிழா முடியும் வரை இடம்பெறவுள்ளதுடன் மேற்படி இந்த திருவிழா முடிவடைந்தாலும் தொடர்ந்து இந்த அங்காடி ஒவ்வொரு கிழமை நாட்களிலும் செவ்வாய் மற்றுமவெள்ளிக்கிழமைகளில்  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.