யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்துக்கு பூங்கா திறந்துவைப்பு

யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்துக்கு பூங்கா திறந்துவைப்பு

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தின் முன்னாள் செயலாளர் அமரர் தணிகாசலம் ஞாபகார்த்த பூங்கா  செவ்வாய்க்கிழமை திறத்துவைக்கப்பட்டது.

ஆலய தர்மகர்த்தா சபைத தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் பூங்காவைத் திறந்துவைத்தார். முன்னதாக ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய முன்றலில் இருந்து அமரரின் படம் உறவினர்களினால் ஊர்வலமாக பூங்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு நிறுவப்பட்டது.

அமரரின் குடும்பத்தினரால் இந்த பூங்கா ஆலயத்தின் தெற்கு வீதியில் அமைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.