யாழ்.தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த கொடியேற்றம்

யாழ்.தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க அன்னதானக் கந்தன் என அழைக்கப்படும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த கொடியேற்ற நிகழ்வு இன்று நேற்று திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் அடியவர்களின் அரோகரா கோஷத்தின் மத்தியில் இடம்பெற்றது.

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சந்நிதியானைச் தரிசிக்க திரண்டிருந்தனர். அடியார்களின் தூக்குக் காவடி மற்றும் கற்பூரச் சட்டி எடுத்தும் தமது நேர்த்திகளை நிறைவு செய்தனர்.

சுவாமி உள்வீதி வெளிவீதி உலா வரும் நிகழ்வும் இடம்பெற்றது. வடமராட்சி, வலிகாமம், தென்மராட்சி பகுதிகளைச் சேர்ந்த அடியார்கள் தமது சொந்த வாகனங்களில் வந்திருந்தனர். அத்துடன் தூர இடங்களில் இருந்து வந்தவர்கள் ஆலய சுற்றாடலில் உள்ள மடங்களில் தங்கியிருந்தார்கள்.