அறநெறிக்காவலர் அமரர்.கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம் நேற்றுப் புதன்கிழமை(20-02-2019) பிற்பகல்-04 மணி முதல் யாழ். நல்லூர் கோவில் வீதியிலுள்ள இந்து மாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
இந்து மாமன்ற உபதலைவரும்,பிரபல ஆன்மீகச் சோற்பொழிவாளரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமரர் கந்தையா நீலகண்டனின் துணைவியார் சட்டத்தரணி திருமதி- சசிதேவி நீலகண்டன் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது மகனான சட்டத்தரணி நீலகண்டன் பிரணவன் கந்தையா நீலகண்டனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்.
தொடர்ந்து நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சரிய சுவாமிகள் மற்றும் அமெரிக்க ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ரிஷி தொண்டுநாத சுவாமிகள் ஆகியோர் பிரார்த்தனையுரைகள் ஆற்றினர்.
அதனைத் தொடர்ந்து "போருக்குப்பின் இலங்கையில் சைவசமயம்" எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாட் பேராசிரியர்- பொன் பாலசுந்தரம்பிள்ளை நினைவுப் பேருரை நிகழத்தினார்.
மேற்படி நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்,புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், தினக்குரல் ஸ்தாபகர் எஸ்.பி.சாமி,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் வணிகத் துறை பேராசிரியர் க. தேவராஜா,மூத்த கவிஞர் சோ.பத்மநாதன், கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பிரதி அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி ச. லலீசன்,பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலசண்முகன், மூத்த ஊடகவியலாளர்களான அ.கனகசூரியர்,என்.கே.குலசிங்கம், மற்றும் சட்டத்தரணிகள்,கல்வியலாளர்கள், பல்துறைசார்ந்தவர்கள், கந்தையா நீலகண்டனின் குடும்ப உறுப்பினர்கள் என மண்டபம் நிறைந்த கூட்டத்தினர் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகள் 22.20.2019