யாழ்.நல்லூர் கந்தன் ஆலயத் திருவிழா பணிகள் ஆரம்பம்

யாழ்.நல்லூர் கந்தன் ஆலயத் திருவிழா பணிகள் ஆரம்பம்

வரலாற்று சிறப்பு பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்திற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் யாழ்.மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

 
நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி
தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. 
 
இதனையடுத்து மஹோற்சவ காலத்தில் பிரதட்டை அடிப்பவர்களுக்கு ஏதுவாக ஆலய சூழலிருந்த பழைய மணல் அகற்றப்பட்டு புதிய மணல் கொண்டு வரப்பட்டு கொட்டப்படுகின்றது.   
 
மேலும் ஆலயத்தின் நான்கு திசைகளிலுமுள்ள வீதிகளில் நிழல் பந்தல்களும் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.