யாழ் நவக்கிரிப்பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயம்

யாழ் நவக்கிரிப்பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயம்

யாழ். புத்தூர் நவக்கிரியைச்  சேர்ந்த வாழைக்குலை வியாபாரி  மீது      மூன்று பேரைக் கொண்ட கும்பல்  மேற்கொண்ட  வாள்வெட்டில் படுகாயமடைந்த அவ்வியாபாரி அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சனிக்கிழமை  இரவு  இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மருதயன் புஸ்பராசா (வயது 50) என்பவரே படுகாயமடைந்தார்.
வாழைக்குலை கொள்வனவு செய்பவர்கள் போன்று, இவரது வீட்டுக்கு வந்த மூன்று பேர்,  அவரை வாளால் வெட்டிவிட்டு  தப்பிச்சென்றனர் 

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.