நீர்வேலியில் உற்பத்தியாகும் கைப்பணிப் பொருட்கள் கனடாவுக்கு ஏற்றுமதி

நீர்வேலியில் உற்பத்தியாகும் கைப்பணிப் பொருட்கள் கனடாவுக்கு ஏற்றுமதி

யாழ். நீர்வேலியில் உற்பத்திசெய்யப்படும் பனை ஓலைசார் கைப்பணிப் பொருட்கள் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இப்பகுதி மக்கள் இக் கைப்பணி உற்பத்திகளில் அதிக ஆர்வத்துடன் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்வேலி கமாட்சி அம்பால் ஆலயத்துக்கு அருகில் செயற்படும் தேசிய அருங்கலைகள் பேரவையின் பயிற்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்ட பனை ஓலை உற்பத்திப் பொருட்கள் கனடா ரொறன்ரோ நகருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

பனை ஓலையை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இடியப்பத்தட்டு, ஓலை நீத்துப்பெட்டி, அர்ச்சனைத்தட்டுக்கள், உள்ளிட்ட பொருட்கள் கனடாவில் உள்ள ரொறன்ரோ நகருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு விற்பனை செய்யப்படுகிறது.

பனை ஓலை உற்பத்திப் பொருட்களை கனடாவில் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ரொறன்ரோ அரன்கோ நிறுவன உரிமையாளர் இராசநாயகம் கௌரீசன் செய்துள்ளார்.

இந்த பொருட்களைக் கனடா நாட்டினரும் புலம்பெயர் உறவுகளும் விருப்பத்தோடு கொள்வனது செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. பனை ஓலை உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சியில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்ற யுவதிகள் இந்த தொழில் முயற்சியில் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர்.