யாழ். நீர்வேலி பகுதியில் வெடிமருந்துடன் இருவர் கைது

யாழ். நீர்வேலி பகுதியில் வெடிமருந்துடன் இருவர் கைது

யாழ். நீர்வேலி பகுதியில் தடை செய்யப்பட்ட இறப்பர் வெடிமருந்துகளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை   கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று தெரிவித்தார். 

 
சந்தேகநபர்களிடமிருந்து 9 கிலோ 416 கிராம் இறப்பர் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது. 
 
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார், கூலித் தொழிலாளியாக பணிபுரியும் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், நான்கு பைகளில் இருந்த வெடிமருந்துகளையும் கைபற்றியதாக  பொறுப்பதிகாரி  மேலும் தெரிவித்தார்.