யாழ். நுணாவிலில் சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

யாழ். நுணாவிலில்  சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

வீட்டில் 8 வயது சிறுவனை தனியாக விட்டுச் சென்ற பெற்றோர், மறுநாள் அவரை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர். யாழ்ப்பாணம் நுணாவில் மத்தியைச் சேர்ந்த ராஜகோபால் தர்சின் ஆகாஸ் (வயது 8) என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது:

சிறுவனின் பெற்றோர் இருவரும் தொழில் காரணமாக நேற்று சனிக்கிழமை சிறுவனை வீட்டில் தனியாக விட்டுச் சென்றுள்ளனர். மதியம் வீடு திரும்பிய பெற்றோர் சிறுவனைக் காணாது பல இடங்களிலும் தேடியுள்ளனர்.

எனினும் சிறுவனை கண்டு பிடிக்கமுடியவில்லை.

இன்று மறுபடியும் தேடிய போது சிறுவன் வீட்டுக் கிணற்றில் சடலமாகக் காணப்பட்டுள்ளான்.

இதனையடுத்து சம்பவம் சாவகச்சேரிப் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

செய்திகள்

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர் மாயம்

பஹ்ரைன் நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராசா இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.அவர் இம்மாதம் 11ஆம் திகதி...

இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் .

இலங்கையர் ஒருவர் இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். சந்திரன் குணராஜா என்பவரே நாடு கடத்தப்பட்டுள்ளார். வீசா முடிவடைந்த நிலையில் இவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு...

5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்

எதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பயணிகள்...

யாழ் வடமராட்சி கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் அபிவிருத்தி

யாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.இந்நிலையில் ஆலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்தின்...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர் மாயம்

பஹ்ரைன் நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற காணாமல் போயுள்ளார் என...

இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் .

இலங்கையர் ஒருவர் இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். சந்திரன் குணராஜா என்பவரே...

1 | 2 | 3 | 4 | 5 >>