யாழ். நெல்லியடி பகுதியில் விபத்தில் ஒருவர் மரணம்

யாழ். நெல்லியடி பகுதியில் விபத்தில் ஒருவர் மரணம்

யாழ். நெல்லியடி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் நெல்லியடி இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இன்பன் புஸ்பகரன் (வயது 36) என்பவர் வெள்ளிக்கிழமை (10) உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.


அத்துடன், கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலம் பிரதீபன் (வயது 24) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கும் பஸ் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் இருவரும் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.