யாழ்.பருத்தித்துறையில் திருமண வீட்டிற்குச் சென்றவர்கள் வீட்டில் திருட்டு

யாழ்.பருத்தித்துறையில் திருமண வீட்டிற்குச் சென்றவர்கள் வீட்டில் திருட்டு

யாழ்.பருத்தித்துறையில் வீட்டில் இருந்தவர்கள் திருமண வைபவமொன்றிற்குச் சென்றிருந்த வேளை வீட்டிலிருந்த 85 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) பகல் திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம்,  யாழ். பருத்தித்துறை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

ஹாட்லிக் கல்லூரியின் முன்னாள் அதிபர் வே.பத்மநாதன் என்பவரது வீட்டிலே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்;னாள் அதிபர், தனது குடும்பத்துடன் காலையில் திருமண வீட்டிற்குச் சென்றுவிட்டு நண்பகல் 12 மணிக்கு வீட்டிற்கு வந்தவேளை வீட்டின் முன்பக்கக் கதவு திறந்து இருப்பதை அவதானித்துள்ளார்.

தொடர்ந்து, வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது.

இது தொடர்பில், முன்னாள் அதிபர், பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும், முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.