யாழ்.பருத்தித்துறையில் முச்சக்கரவண்டி விபத்து நால்வா் படுகாயம் -

யாழ். பருத்தித்துறை முள்ளிவெளிச் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமுச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்ததால் இதில் பயணித்த நால்வர்படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மீசாலை மேற்கைச் சேர்ந்த ஐயாத்துரை தங்கராசா (வயது 66) அருட்குமரன்கிருஷக் (வயது 31) அருட்குமரன் மனுஜா (வயது 30) மீசாலை வடக்கைச் சேர்ந்தசதீஸன் சியாமினி (வயது 23) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்