யாழ். பருத்தித்துறை சிவன்கோவில் தேர்ச்சில்லு காலில் ஏறி வயோதிபர் படுகாயம் -

யாழ். பருத்தித்துறை சிவன்கோவில்  தேர்ச்சில்லு காலில்  ஏறி வயோதிபர் படுகாயம் -

யாழ்.பருத்தித்துறை சிவன்கோவில் தேர்த்திருவிழாவின் போது தேர்ச்சில்லு காலில் ஏறியதில் படுகாயமடைந்த வயோதிபர், யாழ். போதனா வைத்தியாசாலையில்,நேற்று புதன்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புலோலி, புற்றளைப் பகுதியினைச் சேர்ந்த மகாலிங்கம் இராமசாமி (69) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

தேரின் வடத்தினை பிடித்து கொண்டிருந்த குறித்த வயோதிபர் கீழே வீழ்ந்த நிலையில், தேர்ச்சில்லு அவரது காலில் ஏறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.