யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது

யாழ்.பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது

யாழ். திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த, தாவடியைச் சேர்ந்த 22 வயது இளைஞனை, கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரிடமிருந்து 4 கிராம் கஞ்சா மற்றும் 120 மில்லிகிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கும் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.