யாழ்.புத்தூர் சாவகச்சேரி வீதியில் தடம் புரண்ட வாகனம்.ஒருவர் பலி

புத்தூரிலிருந்து சாவகச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பிரவாணி சந்தியில் தடம்புரண்டதில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் புத்தூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து ஒன்று மட்டுவில் வண்ணாத்திப் பாலத்திற்கு அருகே மின்கம்பத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணடைந்துள்ளார். மேலும் பலர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் சாவாகச்சேரி, மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
இன்று திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழித்தட அனுமதி இல்லாத காரணத்தினால் ஏ9 வீதி வழியாகச் செல்லாது புத்தூர் வீதியூடாகச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது. அதிக வேகத்துடன் வந்த பேரூந்து வண்ணாத்திப்பாலத்திற்கு அருகில் உள்ள வளைவில் திருப்ப முற்பட்டபோது முன்னால் உள்ள மின்கம்பத்துடன் மோதி தடம்புரண்டு அருகில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்தது. இந்த விபத்தில் வவுனியா ரெலிக்கொம்மில் பணிபுரியம் மானிப்பாய் கட்டுடையை சேர்ந்த நாகராசா சதீஸ்குமார் (வயது 24) என்பவரே உயிரிழந்தார்.
 
விடுமுறையில் வீட்டிற்கு வந்துவிட்டு திரும்பும்போதே விபத்தில் சிக்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர் மிதி பலகையில் நின்றிருந்ததாலேயே பேருந்து தடம்புரண்டபோது அதில் சிக்குண்டு மரணமானார் என சக பயணிகள் தெரிவித்தனர். இராணுவத்தினரின் உதவியுடன் பேரூந்து வெளியில் எடுக்கப்பட்டது. அத்துடன் இறந்தவரின் சடலமும் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேவேளை சாரதியும் நடத்துநரும் தலைமறைவாகி விட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 இந்த விபத்தில் காயமடைந்த எட்டுப் பேர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
 இராமு மூர்த்தி (வயது 60 - கொழும்பு). புவனேஸ்வரன் நிரோஜன் (வயது 20 - கட்டைக்காடு), சென்னன் சற்குணதாசன்(வயது 30 - பருத்தித்துறை), சண்முகராஜா அனுஷா( வயது 32 - பருத்தித்துறை), ராஜா தீபா(வயது 25 - அரியாலை), புஸ்பராஜா துஸ்யந்தன் (வயது 22 - சரசாலை தெற்கு), ஜோசப் குமார் சுகன்யா (வயது 25 - கோப்பாய் தெற்கு), ஏ.சாந்தினி (வயது 51 - மானிப்பாய்) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். இதில் இராமு மூர்த்தி, சதீஸ்குமார் ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.