யாழ் பொன்னாலையில் வீதி விபத்தில் சிறுவன் படுகாயம்

யாழ்ப்பாணம் பொன்னாலையில் வீதியால் நடந்து சென்ற சிறுவனை பஸ் மோதியதால் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 
பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு அருகில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றது.
 
விபத்தில் தொல்புரம் மேற்கு சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த அருமைநாயகம் ஐங்கரன் (வயது 15) படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
 
பொன்னாலைப் பகுதியிலிருந்து வந்த விசேட சேவை பஸ் ஒன்று வீதியால் வந்த ஆட்டோவை முந்திக்கொண்டு செல்ல முற்பட்ட வேளை நடந்து சென்ற சிறுவனின் பின்புறமாக மோதியுள்ளது.
 
 
தலையில் படுகாயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.