யாழ்.போதனா வைத்திய சாலையில் திருட்டு

யாழ்.போதனா வைத்திய சாலையில் திருட்டு

வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த இரு பெண்களை அடையாளம் கண்டு உள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்.போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து , இதய துடிப்பு காட்டியுடன் (டேடஸ் கோப்)  இரு பெண்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியதனை மறைகாணிகளின் (சி.சி.ரி.வி) உதவியுடன் கண்காணித்தோம்.

அதன் போது அவர்கள் இருவரும் சத்திரசிகிச்சை கூடத்திற்கு சென்று , அதில் ஒருவர் சத்திர சிகிச்சை கூடத்தினுள் செல்வதற்கு வைத்தியர்கள் உபயோகிக்கும் ஆடைகளை அணிந்து சத்திர சிகிச்சை கூடத்திற்குள் செல்ல முற்பட்ட வேளை அங்கிருந்த பெண் காவலாளிகள் ஊடாக அவர்களை பிடிக்க முற்பட்டோம்.

அதன் போது ஒருவர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் ஒருவரை மடக்கி பிடித்து இருந்தோம். பிடிக்கப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது , தாம் இருவரும் வைத்தியர்கள் போன்று ஆடை அணிந்து வைத்திய சாலையில் பல திருட்டுக்களில் ஈடுபட்டமையை ஒப்புக்கொண்டதுடன் , வைத்திய சாலைக்கு சொந்தமான பொருட்களையும் திருடியுள்ளதாக ஒப்புகொண்டார்.

அதேவேளை அப்பெண்ணின் கைத்தொலைபேசியினை வாங்கி அதனை பரிசோதிக்க முற்பட்ட வேளை குறித்த பெண் எம்மிடமிருந்து தப்பி சென்று வெளியில் தயாராக இருந்த ஒரு ஆணின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடினார்.

அதன் பின்னர் நாம் குறித்த பெண்ணின் கைத்தொலைபேசியினை ஆராய்ந்த போது அதில் "அம்மா" என  சேமிப்பில் இருந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு , " இந்த போன் நிலத்தில் விழுத்து கிடந்தது எடுத்தோம் " என கூறி அதன் உரிமையாளர் தொடர்பில் கேட்ட போது , தாங்கள் மட்டக்களப்பில் வசிக்கின்றோம். எனது மகள் யாழில் தங்கி இருந்து மருத்துவ படிப்பை மேற்கொள்கின்றார். அவரின் தொலைபேசி தான் இது என கூறினார்.

அதன் பின்னர் நாம் அவரது மகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர் எங்கும் மருத்துவ படிப்பை மேற்கொள்ளவில்லை. அவர் வீட்டாரை ஏமாற்றி இங்கு தங்கியுள்ளார் என கண்டறிந்தோம்.

அதேவேளை குறித்த பெண்ணின் கைத்தொலைபேசியில் சேமிப்பில் இருந்த படங்களை பார்த்த போது அதில் ஒரு ஆணுடன் ஜோடியாக உள்ள பல படங்கள் காணப்பட்டன. அந்த படங்களில் இருந்த ஆண் தான் மோட்டார் சைக்கிளில் பெண்ணை ஏற்றிக்கொண்டு தப்பி சென்ற ஆண் என்பதனை கண்டறிந்தோம்.

அதன் பின்னர் குறித்த ஆண் தொடர்பில் விசாரித்த போது , அவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் எனவும் , சுன்னாகம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றார் எனவும் கண்டறிந்தோம்.

30 நாள் குழந்தையுடன் திருட்டில் ஈடுபட்ட பெண்.

அதேவேளை வைத்திய சாலையில் நோயாளிகளிடம் பணம் , நகை என்பவற்றை திருடி வந்த மற்றுமொரு பெண்ணை அடையாளம் கண்டு அவரை பிடித்து விசாரித்த போது ,

குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர். அவருக்கு 30 நாட்களுக்கு முன்னர் தான் குழந்தை பிறந்துள்ளது. இவர் வைத்திய சாலைக்குள் நடமாடி நோயாளிகளின் நகைகள் பணங்களை திருடி வந்துள்ளார்.

இவரால் திருடப்படும் நகைகள் மிருசுவில் பகுதியில் வசிக்கும் இரு பெண்களின் உதவியுடன் விற்று வந்துள்ளார். என்பதையும் கண்டறிந்தோம்.

குறித்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் யாழ். பொலிசாரிடம் பாரப்படுத்தி உள்ளதாக மேலும் பணிப்பாளர் தெரிவித்தார்

செய்திகள்

05.12.2018


செய்திகள்

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர் மாயம்

பஹ்ரைன் நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராசா இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.அவர் இம்மாதம் 11ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.எனினும் இதுவரையில் யாழ். கோப்பாய் பொலிஸ்...

இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் .

இலங்கையர் ஒருவர் இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். சந்திரன் குணராஜா என்பவரே நாடு கடத்தப்பட்டுள்ளார். வீசா முடிவடைந்த நிலையில் இவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதியன்று இந்தோனேசியாவுக்கு சென்றுள்ளார். 30 நாட்களுக்கு மாத்திரமே அவரின் வீசா...

5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்

எதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பயணிகள் காலத்தை மீதப்படுத்தி ரயிலில் பயணிப்பதற்கே எதிர்பார்கின்றனர்.  இதனால் பொது மக்களின்...

யாழ் வடமராட்சி கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் அபிவிருத்தி

யாழ் வடமராட்சி பொலிகண்டி பகுதியில் அமைந்துள்ள கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் 90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.இந்நிலையில் ஆலய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வாலயத்தின் முப்பரிமாண தோற்ற மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.அண்மையில் இவ்வாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா மிகவும்...

இலங்கை பெண்களை தாக்கிய வேற்றுகிரக வாசிகள்?

அனுராதபுரம் மஹாவிளச்சி பிரதேசத்தில் மறைந்திருந்த குள்ள மனிதன் தம்மை கீறி விட்டு தப்பிச் சென்றதாக சில பெண்கள் தெரிவித்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சில சேனை பயிர்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குள்ள மனிதனை நேரில் பார்த்ததாக...

புன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகம் நடாத்திய "குடி குடியைக் கெடுக்கும்" எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு நாடகம் அண்மையில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு ஒளிநிலா சனசமூக நிலைய முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் யாழ்.மாவட்ட சிறுவர் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் ச.றொபின்சன் பிரதம...

யாழில் இலவச மருத்துவ முகாமும் கருத்துப் பகிர்வும்

கொமர்ஷல் வங்கியினால் அரச ஓய்வூதியர்களுக்கு விசேடமாக நடாத்தப்படும் இலவச மருத்துவ முகாமும், ஓய்வூதியர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட குறைந்த வட்டியிலான கடன் திட்டம் பற்றிய கருத்துப் பகிர்வும் நாளை மறுதினம் சனிக்கிழமை(23) காலை-08.30 மணி முதல் யாழ். நகரிலுள்ள ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது....

இலங்கை வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை!

வீதிகளில் அதிக வேகத்தில் பேருந்துகளை செலுத்தும் சாரதிகளின் மற்றும் பேருந்துகளின் சாரதிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு செல்லும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்துச்செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.போக்குவரத்தில் விபத்துக்களை குறைக்கும்...

இலங்கையில் இந்திய பழங்களுக்கு தடை

இந்தியாவிலிருந்து திராட்சை மற்றும் மாதுளம்பழங்களின் இறக்குமதியை அரசாங்கம் தற்காலிகமாகத் தடை செய்துள்ளது. இந்தியாவிலிருந்து பழங்களை இறக்குமதி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கை தொடர்பான விதிமுறைகளை பூர்த்தி செய்யாத நிலையிலேயே இவ்வாறான தடையை விதிக்க முடிவு...

இலங்கையில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன்

45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் மனிதர்கள் வாழ்ந்தமை புதிய ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..ஹோமோ சேபியன் இன மனிதர்கள் ஆபிரிக்காவுக்கு வெளியில் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இலங்கையின் மலைக்காடுகளில் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர்.இந்த மனிதர்கள்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)

இன்று  திரு திருமதி  பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட  திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும்   உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...

பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன்   அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...

திருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019.    திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...

பிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...

பிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன்  வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா  யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...

1 | 2 | 3 >>