யாழ். மருதங்கேணி பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி

யாழ். மருதங்கேணி பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளி

யாழ். மருதங்கேணி குடத்தனை பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளியில் 6 வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தத்தில் 3 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதேவேளை, சேதம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்

யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம். அத்துடன் இந்த வீடுகளைப் புனரமைப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவுள்ளார் எனவும் மேலும் தெரிவித்தார்