யாழ்.மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் விபத்து.ஒருவர் காயம்

யாழ்.மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் விபத்து.ஒருவர் காயம்

மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்ததார். இந்த விபத்து நேற்றுக் வியாழக்கிழமை காலை மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி முன்றிலில் உள்ள வீதிக் கடவைக்கு அருகில் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இவர் அலுவலகத்துக்குச் செல்வதற்காக வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் குறுக்கே வந்த ஒருவருடன் மோதுவதைத் தவிர்க்க முயன்றபோது நிலைதடுமாறி வீழ்ந்து காயமடைந்தார்.

உடுவில் பிரதேச செயலக கலாசார அலுவலரான திருமதி சிவஞானசேகரம் பத்மராணி (வயது 50) என்பவரே தலையில் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்