யாழ்.மல்லாகத்தில் தனக்கு தானே தீ மூட்டிய நபர் வைத்தியசாலையில்

மல்லாகத்தைச் சேர்ந்த நபரொருவர் தனக்குத் தானே தீ மூட்டி எரிந்த நிலையில் இன்று பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த கனகரத்தினம் யோகதாசன் (வயது 64) என்ற நபரே தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

குறித்த நபர் மது போதையில் தனது மனைவியுடன் சண்டையிட்டு இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தினையடுத்து உறவினர்கள் தீயை அணைத்துள்ளனர். எனினும், அவர் மிகவும் மோசமாக எரிந்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்ழைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளார்கள்.