யாழ்.மாவட்டத்தில் நேற்றும் இன்றும் கடும் மழை

யாழ்.மாவட்டத்தில் நேற்றும் இன்றும் கடும் மழை

யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றுச் சனிக்கிழமை (25.10.2014) பிற்பகல் 03 மணி முதல் சுமார் ஒரு மணித்தியாலம் வரை கடும் மழை பொழிந்தது. இதன் காரணமாகப் பல இடங்களிலும், வீதிகளிலும் வெள்ள நீர் தேங்கி நின்றமையை அவதானிக்க முடிந்தது.

யாழ்.குடாநாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.15 மணி முதல் சுமாரான மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தமையைக் காணக் கூடியதாகவிருந்தது.

அத்துடன் இன்றைய தினம் முழுவதும் மப்பும் மந்தாரமுமான கால நிலை நீடித்தமையையும் காணக் கூடியதாகவிருந்தது.

இதேவேளை யாழ்.மாவட்டத்தில் இவ் வருடம் இதுவரையான காலப்பகுதியிலும் 500.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தொடர்ந்து வரும் காலங்களில் கூடுதலான மழை வீழ்ச்சி கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆய்வு நிலையப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.