யாழ். மாவட்டத்தில் மழையால 1545 குடும்பங்கள் பாதிப்பு

 யாழ். மாவட்டத்தில்  மழையால 1545 குடும்பங்கள் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால், 1545 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது நலன்புரி முகாம்களில் தங்கவிடப்பட்டுள்ளனர்

கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் தாழ்நில பிரதேசங்கள் மழை வெள்ள நீரில் மூழ்கியதில் வலிமேற்கு பிரதேச சபைக்கும் பிரதேச செயலகத்து நிர்வாக எல்லைக்குள் வரும் வட்டுக்கோட்டை தெற்கு முதலிகோவிலடி கிராமத்தின் தொலைவில் உள்ள வயலையும் குளங்களையும் கொண்ட இன்பசோலை குக்கிராமத்தில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து தாண்டவமாடியதில் அன்றாடம் தினக்கூலி வேலைகளுக்கு செல்லும் சுமார் 12குடும்பங்கள் வீடுகளுக்குள் வாழமுடியாது அயலில் உள்ள உறவினர் வீடுகளில் பொழுதை கழித்து வருகிறார்கள்.

இவர்களது இக்கட்டான நிலைமையை இனம் கண்ட  வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தனுடனும் தொடர்பு கொண்டு நிலைமையை கூறியதனால் இன்று உடனடியாகவே நிலைமையை பார்வையிட்டு காலையும் மாலையும் பாணும் மதியம் சமைத்த உணவும் வழங்கி பசி போக்கியதுடன் எதிர்வரும் நாட்களிலும் சில அவசிய உதவிகளை வழங்க உள்ளார்