யாழ்.மீசாலை வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆண் ஒருவரின் உடலம் நேற்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேயிடத்தினைச் சேர்ந்த குணசிங்கம் குணரட்ணம் (வயது 35) என்பவரே இவ்வாறு உடலமே மீட்கப்பட்டார்.
இவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்
மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.