யாழ். புன்னாலைக்கட்டுவன் சந்தியில் கடை உடைத்து பொருட்கள் திருட்டு

யாழ். புன்னாலைக்கட்டுவன் சந்தியில் கடை உடைத்து பொருட்கள் திருட்டு

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கு சந்தியில் அமைந்துள்ள வியாபார நிலையத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம், பொருட்கள் என 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான உடமைகள் திங்கட்கிழமை (15) இரவு திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடையினுள் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம், தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள், சிகரெட் வகைகள், பால்மா வகைகள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் -