யாழ்.வடமராட்சியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை

யாழ்.வடமராட்சியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை
நேற்று இரவு 8 மணியளவில் யாழ்.வடமராட்சி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் அல்வாய் வடக்கு நக்கீரன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான செந்தூரன் (வயது44) பொல்லால் கடுமையாக தாக்கியதையடுத்து உயிரிழந்துள்ளார்.
 
மேலும் தாக்கப்பட்டவரை சிகிச்சைகாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்துள்ளார். சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
இச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும், இரு தரப்பினர்களுக்கிடையே நிலவிய நீண்டகால பகையே இக்கொலைக்க்காண காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்