யாழ்.வடமராட்சியில் குளவித்தாக்கி 12 போ் வைத்தியசாலையில்

யாழ்.வடமராட்சியில் குளவித்தாக்கி 12 போ் வைத்தியசாலையில்

வடமராட்சி புறாப் பொறுக்கியில் புளியமரத்தில் இருந்த கருங்குளவிக் கூட்டினை சிறுவா்கள் கல்லெறிந்து தாக்கியதில்  12 பேர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது.

 

குளவிக் கூட்டினைக் கல்லால் எறிந்து சேதப்படுத்திவிட்டு சிறுவா்கள் ஓடிவிட்டதாகவும் ஆனால் இது தெரியாது அப்பகுதியால் வந்த வழிப்போக்கா்களே குளவியின் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரியவருகின்றது