யாழ்.வடமராட்சி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவா்களை மயக்கி பெருமளவு பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
இந்த சம்பவம் வடமராட்சி - துன்னாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டில் இருந்த உறவினர்கள், துன்னாலையில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பிகளை அறுத்து வீட்டிலுள் இறங்கிய கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை மயக்கி கொள்ளையடித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்கள், மற்றும் சோக்கோ பொலிஸாரின் உத வியுடன் பருத்தித்துறைப் பொலிஸார் அங்கு விசாரணைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது கைரேகை அடையாளங்களைப் பதிவு செய்வதற்கு பொலிஸார் முயன்ற போது, கொள்ளையர்கள் கையுறையைப் பயன்படுத்தி மின்குமிழ்களைக் கழற்றியுள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகள் 08.07.2019