யாழ்.வடமராட்சி பிரதேசங்களில் நாளை முதல் மது ஒழிப்பு நிகழ்வு

யாழ்.வடமராட்சி பிரதேசங்களில் நாளை முதல் மது ஒழிப்பு நிகழ்வு

வடமராட்சி பிரதேசங்களில் சட்டவிரோத மதுபாவனை ஒழிப்பு நிகழ்வு நாளை முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக பருத்தித்துறை மது வரி திணைக்களம் அறிவித்துள்ளது.   

இதன்படி கரவெட்டி,பருத்தித்துறை, மணக்காடு ஆகிய 3 பிரதேச செயலகங்களுக்கு கீழுள்ள 22 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.   

இதன்போது கசிப்பு விற்பனை, மதுபான விற்பனை, சாராய உற்பத்தி போன்றவற்றை ஒழிக்கும் முகமாக மேற்படி நிகழ்வு நடத்தப்படவுள்ளது.   எனவே வடமராட்சி பிரதேச பொதுமக்கள் அனைவரையும் இதில் பங்கேற்குமாறு மதுவரித் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.