யாழ். வண்ணை ஸ்ரீ அருள் மிகு வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்ற திருவிழா இன்று பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
வைகாசி விசாக திதியுடன் கூடிய நட்சத்திரத்தில் அம்மனுக்குரிய நாளில் பெருந்திரளான பக்தர் அடியார்களின் மத்தியில் கொடியேற்ற திருவிழா அரோகராக சோசத்துடன் பிரதம குருக்களினால் கொடியேற்றி வைக்கப்பட்டது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நா.சிவதர்ஷச குருக்கள் தலைமையிலான சிவாச் சாரிகள் ஆலயகிரிகைகளையும் கொடியேற்ற உற்சவத்தினையும் நடாத்தி வைத்தனர்.
வசந்தமண்டபத்தில் வீரமாகாளி அம்மன்;விநாயகர் முருகன் வள்ளி தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு தீபாராதனையும் புஸ்பhஞ்சலியும் தொடர்ந்து வீரமாகாளி அம்மன் மற்றும் சக தெய்வங்களுடன் சிம்மவாகினிவாகனத்தில் உள் வீதி வலம் வந்து கொடிமரத்தை வந்தடைந்தனர்.பின் 10.00 மணி சுபவேளையில் மஹோற்சவ கொடியேற்றி வைக்கப்பட்டது.
மேலும் இந்த ஆலயத்திற்கு பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டு கொடியேற்றத் திருவிழாவில் அம்பாளின் தருசித்துக் கொண்டனர்.