யாழ் வயாவிளான் யாகப்பருக்கு இன்று நூற்றாண்டு விழா (படங்கள்)

யாழ் வயாவிளான் யாகப்பருக்கு இன்று நூற்றாண்டு விழா (படங்கள்)

வயாவிளான் உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள புனித யாகப்பர் ஆலயத்தின் நூற்றாண்டு விழா திருப்பலி பூசைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றன.

 

கடந்த 24 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள இந்த பகுதியில் காணப்படும் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட தற்போது இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நூற்றாண்டு விழாத் திருப்பலிப் பூசையை யாழ்.மறைமாவட்ட ஆயர் வண.தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை நிகழ்த்தினார்.

இந்த நூற்றாண்டுவிழா திருப்பலிப் பூசையைக் காண பல நூற்றுக்கணக்கானோர் ஆலயத்தில் கூடியிருந்தனர்.

மீள்குடியேற்றம் குறித்த மன்றாட்டங்களோடு திருப்பலிப் பூசை நடைபெற்றது.

1914 ஆம் ஆண்டு சிறிய கொட்டகையில் நிறுவப்பட்ட யாகப்பர் ஆலயம், 1930 ஆம் ஆண்டளவில் புதிய கட்டடத்துடன் விசாலமாக்கப்பட்டது.

பிரசித்திபெற்ற கிறிஸ்தவ வழிபாட்டுத் தலமாக விளங்கிய யாகப்பர் ஆலயத்தில், 1990 ஆம் ஆண்டு இடப்பெயர்வின்போது வழிபாடியற்ற முடியாதுபோனது.

இந்த நிலையில் ஆலயத்தின் பங்குத்தந்தை, ஆயர் இல்லத்தினர், ஆலய நிர்வாகத்தினரின் முயற்சியில் இந்த ஆலயம் சீரமைக்கப்பட்டு பொன்விழாக் காண்கின்றமை குறிப்பிடத்தக்கது.